ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்தியது அமெரிக்கா!

Date:

உக்ரைன் மீதான படையெடுப்பை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ள நிலையில் ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்துவதற்கு அமெரிக்கா தீர்மானித்துள்ளது.

உக்ரைனின் முக்கிய நகரங்களை ரஷ்ய படைகள் கைப்பற்றியுள்ள நிலையில் அங்குள்ள மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகின்றார்கள்.

இந்தப்போரை நிறுத்தும்படி அமெரிக்க, பிரிட்டன், உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றன.

இதற்கிடையே ரஷ்யா மீது பொருளாதார தடை விதிப்பதுடன் அங்கிருந்து கச்சா எண்ணெய் எரிவாயுமற்றும் நிலகக்ரி ஆகியவற்றின் இறக்குமதிக்கும் தடை விதிக்க வேண்டும் என்று உக்ரைன் ஜனாதிபதி மேற்குல நாடுகளிடம் வலியுறுத்தி வருகின்றார்.

இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இனி தாம் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் எரிவாயு மற்றும் நிலக்கரி ஆகியவற்றை இறக்குமதி செய்யமாட்டோம் என்று தெரவித்துள்ளார்.

மேலும், அமெரிக்கா ஒரு நாளைக்கு சுமார் 7,00,000 பீப்பாய்கள் ரஷ்யா கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலிய பொருட்களை இறக்குமதி செய்த நிலையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

வரலாற்றில் மிக முக்கியமான பொருளாதார தடைகளை அமெரிக்கா அமல்படுத்தியுள்ளது, மேலும் இது ரஷ்யாவின் பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தும் என்றும் ஜோ பைடன் கூறியுள்ளார்.

இந்த தடையில் ரஷ்ய எரிவாயு, எண்ணெய் மற்றும் எரிசக்தி ஆகியவை அடங்கும். ரஷ்யா எண்ணெய் இறக்குமதியை அமெரிக்காவை விட அதிகமாக நம்பியிருக்கும் ஐரோப்பிய நட்பு நாடுகளுடன் கலந்தாலோசித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்தத் தடையால் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 132 டொலருக்கு விற்பனையாகின்றது. எதிர்வரும் நாட்களில் இந் விலை 300 டொலர் வரை உயரக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...