வளிமண்டல திணைக்களம் வௌியிட்டுள்ள அறிவிப்பு!

Date:

தென்மேற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்தத்தாழ்வுப்பகுதி தற்போது தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக மையம் கொண்டுள்ளது.

அது அடுத்த 24 மணித்தியாலங்களில் கிழக்கு- வடகிழக்கு திசையில் அந்தமான் கடற்பரப்புகளை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், மார்ச் 21 ஆம் திகதியளவில் ஒரு சூறாவளியாக வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் (03S – 11N, 886E – 96E) மறு அறிவித்தல் வரும் வரை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் குறித்து வழங்கப்படும் எதிர்கால முன்னறிவிப்புகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

Popular

More like this
Related

சுங்க வருவாய் ரூ. 2 டிரில்லியனைக் கடந்தது!

இலங்கை சுங்கத் திணைக்களம், தனது ஆண்டு வருவாய் செயல்திறனில் ஒரு குறிப்பிடத்தக்க...

கஹட்டோவிட்டவில் MEPS & MLSC நடத்தும் முப்பெரும் விழா 2026.

கஹட்டோவிட்ட Muslim Ladies Study Circle  மற்றும் MEPS ஆகியவற்றின் ஏற்பாட்டில்...

நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான விளக்கமறியல் நீடிப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் செப்டம்பர் 23 ஆம் திகதி...

சேதமடைந்த உபகரணங்களுக்காக ரூமேஷ் தரங்கவுக்கு துருக்கிய ஏர்லைன்ஸ் இழப்பீடு!

நாடு திரும்பும் வழியில் தனது விளையாட்டு உபகரணங்களுக்கு ஏற்பட்ட சேதத்திற்காக, இலங்கை...