367 அத்தியாவசியமற்ற பொருட்களை செல்லுபடியாகும் உரிமத்தின் கீழ் மட்டுமே இறக்குமதி செய்வதற்கு உட்பட்டு இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு திணைக்களத்திலிருந்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியது.
அதன்படி இன்று நள்ளிரவு முதல் அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதித்து வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், உரிம முறையின் கீழ், ஒவ்வொரு இறக்குமதியாளரும் தங்கள் இறக்குமதிகள் தொடர்பாக நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுக்க வேண்டும்.
இதேவேளை அனுமதிக்கு முன் அந்த நேரத்தில் கோரிக்கையின் முக்கியத்துவத்தை நிதி அமைச்சகம் பரிசீலிக்கும் என குறித்த வர்த்தமானி அறிவித்தலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.