அப்துல்லாஹ் பனாமா அறிஞரின் வாழ்க்கை, சொல்லும் பாடம் என்ன!

Date:

ஷேக் அப்துல்லாஹ் பனாமா சவூதி அரேபியாவில் ரியாத் நகரில் வாழும் பிரபல இஸ்லாமிய போதகராவார். அந்த அறிஞரின் வாழ்வு சொல்லும் பாடம் என்ன என்பதே இக்கட்டுரையின் உள்ளார்ந்த நோக்கமாகும். அப்துல்லாஹ் பனாமா வாலிப வயதில் இருக்கும்போது திடகாத்திரமான இளைஞராக இருந்தார்.

அப்போதே கராத்தே தற்காப்புக்கலையை கற்றிருந்த அப்துல்லாஹ், நாங்கு பேர்கள் சேர்ந்து தாக்கினாலும் தன்னை பாதுகாத்துக் கொள்ளக்கூடிய வீரம்மிக்கவராக இருந்தார். நீச்சல் அவருக்கு இன்னொரு விருப்பமான விளையாட்டு. 1993 இல் 12ம் வகுப்பு பரீட்சைக்கு நான்கு நாட்கள் இருக்கும் போது சம்பவித்த எதிர்பாராத சம்பவம் ஒன்று அவரின் வாழ்வை திருப்பிப்போட்டது.

அன்று இரவு, அப்துல்லாஹ் பனாமாவின் அறைக்கு வந்த அவரின் தந்தை ஒமர் பனாமா’அப்துல்லாஹ், நீ இன்னும் சிகரெட் புகைக்கிறாயா?’ எனக் கேட்கின்றார். ‘இறைவன் மீதாணையாக நான் சிகரெட் புகைப்பதில்லை தந்தையே’ என்றார் அப்துல்லாஹ்.

ஆனால் உண்மையாகவே அப்துல்லாஹ் சிகரெட் புகைப்பவனாக இருந்தார். தந்தை பலமுறை கண்டித்தும் அவன் திருந்தியதாக அவர் காணவில்லை.

ஆனால் தந்தை மீது ஏற்பட்ட பயத்தினால் பொய்யை அல்லாஹ்மீது சத்தியம் செய்து கூறினார் அப்துல்லாஹ். அல்லாஹ்வின் மீது பொய் சத்தியம் செய்வது பெரும் பாவமாகும், இஸ்லாம் மார்க்கத்தில் தடுக்கப்பட்டதுமாகும்.

இதனைக்கேட்ட ஒமர் பனாமா, மகன் அப்துல்லாஹ்வைப பார்த்து ‘நீ புகைப்பவனாக இருந்தால் உன் கழுத்து முறியும்’ என கோபத்தோடு கூறிவிட்டு அறையை விட்டு வெளியேறினார்.

ஒமர் பனாமா காலையில் மீண்டும் மகனின் அறைக்குச்சென்றார். எழுந்து தொழுமாறு வேண்டியும் அப்துல்லாஹ் செவிசாய்க்காமல் மறுபுறம் திரும்பி தூங்கினார்.

காலையில் எழுந்து பாடசாலைக்குச் சென்று பின்னேரம் நீச்சல் தடாகத்திற்கு சென்ற அப்துல்லாஹ் பனாமா தனது நண்பர்களை விடவும் நீண்டதூரம் நீந்தவேண்டும் என்ற உத்வேகத்தில் நீரில் குதித்தபோது அவரின் தலை உடம்பிற்குக் கீழ் சென்று கழுத்து முறிந்துவிட்டது.

டாக்டர்கள் அப்துல்லாஹ்வின் 3,4,5ஆம் இலக்க கழுத்து என்புகள் முறிந்துள்ளன என உறுதி செய்தனர். பொய் சத்தியமும் தந்தையின் கோபமும் அப்துல்லாஹ்வின் விடயத்தில் உண்மையாயிற்று.

அப்துல்லாஹ் நாங்கு வருடங்கள் வைத்தியசாலையில் இருந்து 12 சத்திர சிகிச்சைகளுக்கு அப்துல்லாஹ் உட்படுத்தப்பட்டாலும் முறிந்த முந்நானை சரிசெய்ய முடியவில்லை.

கழுத்திற்கு கீழுள்ள பகுதிக்கான தொடர்பு அறுந்து போனது போனதாகவே ஆயிற்று. அவரின் தலையை அசையாதவாறு பேண 20முப இழுவைகொண்ட ஆணிகளால் இருபக்கமும் பிணைத்திருந்தார்கள். வெளியே இழுத்து வைக்கப்பட்ட இறப்பர் குழாயினால் சில காலம் சுவாசிக்கவேண்டியிருந்தது.

தற்போது அப்துல்லாஹ் பனாமா, அரபு மொழி பேசும் முஸ்லிம்களுக்கு மத்தியில் பிரபலமான இஸ்லாமிய பிரசாரகராக திகழ்கின்றார். சுன்னா மற்றும் ஒருமித்த இஸ்லாமிய கருத்துக்களின்படி சட்டத் தீர்ப்புகள் வழங்குவதில் பிரபலமானவர்.

அல் மஜித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அப்துல்லாஹ் பனாமாவின் நிகழ்ச்சி ஒன்றைப் பார்த்துக்கொண்டிருந்த குரான் மனனப்பள்ளி ஒன்றில் ஆசிரியையாக கடமையாற்றிய Al-Ghamdi எனும் பெண்மணி, அப்துல்லாஹ் பனாமாவை திருமணம் செய்ய முடிவு செய்தார்.

தற்போது அப்துல்லாஹ்விற்கு இரண்டு குழந்தைகளும் உண்டு. முழு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள பிரபல க்ஷேக் அப்துல்லா பனாமா  ஒரு சம்பவத்தை கூறுகிறார்:,

‘என்னை விட மோசமானவர் யாரும் இல்லை என்று நினைத்தேன்..!!’
அப்துல்லா பனாமா வின் கழுத்திற்கு கீழால் செயலிழந்திருந்தது. கைகள்,கால்கள் எந்தவொரு உறுப்பையும் அவரால் செயற்படுத்தவோ கட்டுப்படுத்தவோ முடியவில்லை. தலையையும் அசைக்க முடியவில்லை. ஆனால் மூளை செயலிக்கவில்லை கூடவே செவிப்புலனையோ, கண்ணின் பார்வையையோ, பேசும் ஆற்றலையோ அவரிடம் இருந்து அல்லாஹ் மீளப் பெறவில்லை. நான் ஒருமுறை என்னை விடவும் மோசமாக பாதிக்கப்பட்டவர் இருக்கமாட்டார் என எனது நட்பு வட்டத்தில் இருந்த ஷேக் ஒருவரிடம் கூறினேன்.

‘உங்களைவிட மோசமானவன் யார் என்று காட்ட என்னுடன் வாருங்கள்..!!’ என என்னை அழைத்துக் கொண்டு ஓரிடத்திற்கு அவர் போனார். அங்கே என்னைப்போன்ற ஒரு நபர் முடங்கிக் கிடப்பதைக்கண்டேன். ஆனால் அவர் என்னைவிடவும் அதிகமாக முடக்கப்பட்டு இருந்தார் அவர் செவிப்புலனை இழந்திருந்தார், அவரால் பேசவும் முடியவில்லை!! அவயவங்கள் செயலிழந்து உடம்பு பிணம்போல அசையாமல் கிடந்தது.! அந்த மனிதரால் அழமட்டும் முடிந்தது. கண்ணீர் கண் ஓரத்தில் வழியும், அவ்வளவே அவரிடம் கண்டேன்.

ஒருமுறை அவரின் குடும்பத்தினர் அவரின் ஆடையில் இரத்தக் கறை படிந்திருப்பதைக் கண்டார்கள். பதறிய அவர்கள் என்ன என தேடிப் பார்த்தப்போது அம்மனிதரின் இரண்டு விரல்கள் வெட்டுப்பட்டது போல காயப்பட்டிருப்பதைக் கண்டார்கள்…!!

என்ன நடந்திருக்கும் என தேடிப் பார்த்தபோது அசைவற்றுக் கிடந்த அம்மனிதரின் ஆடையினுள் நுழைந்த எலி ஒன்று அவரின் விரல்களை சாப்பிட்டிருப்பதைக் கண்டார்கள்.

அசையாத மனிதன் இறந்துவிட்டதாக கருதி எலி சாப்பிட்டிருக்கின்றது. அவராலும் உதவிக்கு யாரையும் அழைக்க முடியவில்லை.

இப்போது உங்களின் பக்கம் திரும்பினால்,
உங்களில் விரல்களால் என்ன செய்கின்றீர்கள்?
உங்களின் கால்களால் என்ன செய்கின்றீர்கள்?
உங்களில் குரலினால் என்ன செய்கின்றீர்கள்?
உங்களின் காதுகளினால் என்ன செய்கின்றீர்கள்?
மேலும் எல்லா அருள்களினாலும், நிச்சயமாக எல்லாம் அவனின் அருள்களே..!!
இறைவா புகழனைத்தும் உனக்குரியதே!!! எனது முகத்தை அழகாக படைத்ததும் உனது பேராற்றலில் உள்ளது ஆகும்.
-அக்பர் ரபீக்

Popular

More like this
Related

‘அஷ்ரப் நினைவு அருங்காட்சியகம்” அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய, அஷ்ரப் நினைவு அருங்காட்சியகம் ஒன்றை...

பாகிஸ்தான் அரசாங்கத்தின் அல்லாமா இக்பால் புலமைப்பரிசில் திட்டம் வழங்கி வைப்பு!

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் மற்றும் பாகிஸ்தானின் உயர்கல்வி ஆணைக்குழுவினால்  2024ஆம் ஆண்டுக்கான அல்லாமா...

ஒன்லைன் சட்டத்தின் கீழ் முதலாவது தீர்ப்பு: இராணுவத் தளபதிக்கெதிராக அவதூறு பரப்பிய யூடியூபுக்கு தடைவிதிப்பு

நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் (Online Safety Act)மூலம் முதலாவது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கை...

புதிய பதவியைப் பொறுப்பேற்றார் முஸ்லிம் சமய திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர்!

முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தில் 15 மாதங்களுக்கு மேல் சேவையாற்றிய முன்னாள்...