அரசாங்கத்திற்கு எதிராக தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த எதிர்ப்பு ஊர்வலம் காரணமாக நுகேகொடை தெல்கந்தவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதுடன் விஜேராம சந்தியில் இருந்து நுகேகொட நோக்கி செல்லும் ஹைலெவல் வீதி முழுவதுமாக தடைப்பட்டுள்ளது.
தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு தீர்வு காண அரசாங்கம் தவறியதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பொருட்களின் தொடர் விலையேற்றத்தைக் கண்டித்தும், அரசு பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும் நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துவரும் நிலையில், ஜே.வி.பியும் பாரியதொரு போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.
ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் இடம்பெறும் இப்போராட்டத்தில் ஜே.வி.பி. சார்பு தொழிற்சங்கங்களும், மாணவர் அமைப்புகளும், மகளிர் அமைப்புகளும் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.