இலங்கையில் உயர்வடையும் டொலரின் பெறுமதி!

Date:

அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி 230 ரூபா வரையில் வீழ்ச்சியடைந்துள்ளது.

இதன்படி வெளிநாட்டு நாளைய கொடுக்கல் வாங்கல்களின் போது ஒரு அமெரிக்க டொலரொன்றின் பெறுமதி 230 ரூபாவாக அமையும் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதேவேளை உடன் நடைமுறைக்குவரும் வகையில் செலாவணி வீதத்தில் மேலும் நெகிழ்ச்சித்தன்மை சந்தைகளுக்கு அனுமதிக்க இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியானது உள்நாட்டு வெளிநாட்டுச் சந்தையிலான அசைவுகளைத் தொடர்ந்தும் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றது.

அதற்கேற்ப பொருத்தமான கொள்கைத் திருத்தங்களை மேற்கொள்ளப்படும் எனவும் மத்திய வங்கியின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் மொத்த வெளிநாட்டு ஒதுக்கம் கடந்த பெப்ரவரியில் 2.3 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவானது. இது கடந்த ஜனவரியில் நிலவிய தொகையை விட 2 சதவீதம் குறைவு.

அதேவேளை புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டுக்கு, அனுப்புகின்ற ஒவ்வொரு அமெரிக்க டொலருக்கும் தற்போது செலுத்த்பட்டு வரும் 10 ரூபா ஊக்குவிப்பு தொகைய 38 ரூபா வரை அதிகரிப்பதற்காக தொழில் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

காஸாவில் போர் நிறுத்தம்: குனூத் அந் நாஸிலாவை நிறுத்திக் கொள்ளுமாறு ஜம்மியத்துல் உலமா வேண்டுகோள்

காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக இதுவரை ஒதப்பட்டு வந்த இன்று முதல்...

இரண்டு ஆண்டுகள் முடக்கத்தில் இருந்த பள்ளிவாசல்: சுத்தம் செய்யத் தொடங்கிய காசா மக்கள்

 யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து நிலைமைகள் சீராகத் தொடங்கியுள்ள நிலையில் மஸ்ஜித் ஸுஹதா...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்தார் ஞானசார தேரர்

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட...

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம்

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக,...