இலங்கை வந்துள்ள உக்ரைன் மற்றும் ரஷ்ய பிரஜைகளின் வீசாக் காலம் நீடிப்பு!

Date:

தற்போது இலங்கையில் தங்கியுள்ள உக்ரைன் பிரஜைகள் மற்றும் ரஷ்யர்களுக்கான வீசாவின் செல்லுபடியை நீடிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதேநேரம், இந்த சுற்றுலா பயணிகளிடம் இருந்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், விசா நீட்டிப்பு இரண்டு மாதங்களுக்கு செல்லுபடியாகும்.

தற்போது, இலங்கையில் 1463 ரஷ்ய சுற்றுலாப் பயணிகளும், 3993 உக்ரைன் சுற்றுலாப்பயணிகளும் தங்கியிருக்கின்றனர்.

இந்நிலையில், ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கிடையில் ஏற்பட்டுள்ள மோதல் நிலைமையால் அவர்களால் மீண்டும் தமது நாடுகளுக்குச் செல்வதற்கு சிரமங்கள் ஏற்பட்டுள்ளன.

இதனைக்கருத்தில் கொண்டு குறித்த சுற்றுலாப் பயணிகளின் வீசா காலப்பகுதியை கட்டண அறவீடுகள் இன்றி இரண்டு மாத காலத்திற்கு நீடிப்பதற்காக சுற்றுலாத்துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை வழங்கியுள்ளது.

Popular

More like this
Related

2 ஆண்டு போர் முடிவுக்கு வந்தது: டிரம்ப் தலைமையில் இஸ்ரேல் – ஹமாஸ் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது: அடுத்து என்ன?

இஸ்ரேல் - காசா போர் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. நேற்று எகிப்தில்...

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை: தேடப்பட்டு வந்த சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது!

‘கணேமுல்ல சஞ்சீவ’ என்று அழைக்கப்படும் பாதாள உலகக் குழுத் தலைவரான சஞ்சீவ...

நாட்டின் சில பகுதிகளில் 100 மி.மீ. வரையான பலத்த மழை

இன்றையதினம் (14) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்குப் பின்...

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...