ஐக்கிய நாடுகள் சபையில் ரஷ்யாவிற்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணை மீதான வாக்கெடுப்பில் இலங்கை நடுநிலை வகித்துள்ளது.
உக்ரைனில் இருந்து ரஷ்யப் படைகளை முழுமையாக அகற்றுமாறு கோரும் பிரேரணை ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
இலங்கை, இந்தியா, சீனா, பாகிஸ்தான் உள்ளடங்களாக 35 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்காமல் நடுநிலை வகித்துள்ளன.
‘உக்ரைனுக்கு எதிரான ஆக்கிரமிப்பு’ என்று தலைப்பிடப்பட்ட தீர்மானம், தாக்குதலை உடனடியாக நிறுத்தவும், அனைத்து ரஷ்ய படைகளை திரும்பப் பெறவும் கோரியது.
அதற்கு ஐ.நா. பேரவையின் 193 உறுப்பினர்களில் 141 பேர் ஆதரவளித்தனர், தீர்மானத்திற்கு எதிராக ஐந்து வாக்குகள் மற்றும் இலங்கை உட்பட 35 நாடுகள் வாக்களிக்கவில்லை.
தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்குமாறு பிரதிநிதிகளை கேட்டுக் கொண்ட ஐக்கிய நாடுகள் சபைக்கான ரஷ்ய தூதர் வாசிலி நெபென்சியா, மேற்கத்திய நாடுகள் அதை நிறைவேற்ற மற்ற நாடுகளுக்கு ‘முன்னோடியில்லாத அழுத்தத்தை’ கொடுக்கின்றன என்றார்.
‘இந்த ஆவணம் இராணுவ நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டுவர அனுமதிக்காது,’ என்றும் அவர் கூறினார்.
கடந்த தசாப்தங்களில் இதுபோன்ற அமர்வு இடம்பெற்றது இதுவே முதல் முறை, கடைசியாக 1997 இல் இஸ்ரேல்- பாலஸ்தீன மோதலின் போது அவசரகால அமர்வு இருந்தது.