கொழும்பு துறைமுகத்திற்கு வெளியே நிறுத்தியிருந்த மற்றுமொரு எரிபொருள் தாங்கியை விடுவிக்க இலங்கை 31 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்தியுள்ளதாக எரிசக்தி அமைச்சர் அறிவித்துள்ளார்.
கொழும்பு துறைமுகத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த சொந்தமான சிங்கப்பூர் நிறுவனத்திற்கு சொந்தமான எரிபொருள் தாங்கிக்கு பணம் செலுத்தப்பட்டதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
பணம் செலுத்தியதைத் தொடர்ந்து, 37,300 மெட்ரிக் தொன் டீசல் அடங்கிய எண்ணெய் தாங்கி ஒன்றை இலங்கை விடுவித்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
டீசல் இறக்கும் பணி விரைவில் தொடங்கும் என எரிசக்தி அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.