நாட்டுக்கு மின்சாரம் வழங்கும் பத்து (10) மின் உற்பத்தி நிலையங்களில் எட்டு உற்பத்தி நிலையங்களை இடைநிறுத்தியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
எரிபொருள் பற்றாக்குறை காரணமாக செயற்பாடுகளை இடைநிறுத்தியுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டதன் காரணமாக தேசிய மின்கட்டமைப்புக்கு சுமார் 424 மெகாவாட் மின்சாரம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
தற்போது சபுகஸ்கந்த அனல்மின் நிலையம் மற்றும் சோஜிட்ஸ் மின் உற்பத்தி நிலையத்தின் A மற்றும் B பிரிவுகள் மாத்திரமே செயற்படுவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
யுகதனவி மின் உற்பத்தி நிலையத்திற்கு இன்றைய தினம் எரிபொருளை வழங்குவதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உறுதியளித்துள்ளதாகவும் இன்று மின்சாரம் தயாரிக்க போதுமானது என்றும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.