ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நாயகம் மிச்செல் பச்லெட்டினை இலங்கைப் பிரதிநிதிகள் குழுவினர் சந்தித்துள்ளனர்.
ஜெனிவாவிற்கு விஜயம் செய்துள்ள இலங்கை குழுவினர் நேற்றிரவு(புதன்கிழமை) சந்தித்துள்ளனர்.
இந்த சந்திப்பின்போது, பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
மேலும் இலங்கை அரசாங்கம் மனித உரிமைகள் விடயம் தொடர்பில் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் மனித உரிமைகள் ஆணையாளர் வெளிவிவகார அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்நிலையில் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில்நாளை கலந்துரையாடல் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், நீதியமைச்சர் பி.சி. அலி சப்ரி, இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன மற்றும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.