ட்ரெண்டிங் ஆகியுள்ள #GoHomeRajapaksas ஹேஷ்டேக்!

Date:

இலங்கையின் பொருளாதாரம் நாளுக்கு நாள் கடும் மோசமடைந்துள்ள நிலையில், மக்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்துள்ளனர்.

இதனால் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் புரட்சி வெடிக்கத் துவங்கியுள்ளது.
எரிபொருள் தட்டுப்பாடு, டொலர் தட்டுப்பாடு, எரிவாயு தட்டுப்பாடு, அத்தியாவசிய உணவுப் பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், #GoHomeRajapaksas என்ற ஹேஷ்டேக் தற்போது இலங்கையில் ட்ரெண்டிங்கில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக #GoHomeGota மற்றும் #GoHomeGota2022 ஆகிய இரண்டு ஹேஷ்டேக் இலங்கையில் பிரபலமாக இருந்தன.

#GoHomeGota பிரச்சாரத்தை எதிர்கொள்ள சமூக ஊடகங்களில் #WeAreWithGota பிரச்சாரமும் தொடங்கப்பட்டது.

தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக அரசாங்கத்தை இராஜினாமா செய்ய வேண்டும் என்ற அழுத்தங்கள் அதிகரித்து வரும் நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவாக இந்த பிரச்சாரம் ஆரம்பிக்கப்பட்டது.

பல அரசாங்க அரசியல்வாதிகள், கலைஞர்கள் மற்றும் ஊடகப் பிரமுகர்களும் #WeAreWithGota பிரச்சாரத்திற்கு ஆதரவாக ட்வீட் செய்திருந்தனர்.

இந்நிலையில், இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி குறித்து ராஜபக்சே ஆட்சிக்கு எதிராக பொதுமக்கள் தொடர்ந்து கோபத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில் #GoHomeRajapaksas என்ற ஹேஷ்டேக் தற்போது டிரெண்டாகி வருகிறது.

Popular

More like this
Related

இராஜதந்திர நியமனங்களில் ஜித்தா ஏன் ஒரு விதிவிலக்காகிறது ?

ஜித்தாவுக்கான கொன்சல் ஜெனரல் நியமனம் தொடர்பில் முஸ்லிம் சமூகத்தில் பெரும் அதிருப்தி...

பாடசாலை மாணவர்களுக்கு 6,000 ரூபாய் உதவித்தொகை: வங்கிக் கணக்குகளில் வைப்பீடு

பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கான 6,000 ரூபாய் உதவித்தொகை...

உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பகுதிக்கான திகதி அறிவிப்பு!

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பகுதி எதிர்வரும்...