இன்றைய தினம் நாட்டில் தொடர்ச்சியாக 10 மணிநேர மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 10 மணித்தியாலங்களுக்கு நாடளாவிய ரீதியில் பல்வேறு நேரங்களில் மின்வெட்டு தடைபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
A,B,C,D,E,F,G,H,I,J,K,L வரையிலான வலயங்களில் காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 10 மணி நேரமும், டீ முதல் று வரையான வலயங்களுக்கு 10 மணி நேரமும் மின்தடை ஏற்படும்.
மேலதிகமாக, M, N, O, X, Y, Z என பல புதிய வலயங்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளன.
750 மெகாவாட் வெப்பத் திறனுக்கான எரிபொருள் கிடைக்காததால் மின்வெட்டு காலத்தை 10 மணிநேரமாக அதிகரிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.