அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளில் படிக்கும் அனைத்து மாணவர்களையும் வழக்கம் போல் நாளை (மார்ச் 14) முதல் பாடசாலைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான சுற்றறிக்கையை கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா இந்த வார தொடக்கத்தில் வெளியிட்டு அதிகாரிகளுக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
முன்னதாக, கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக ஒரு வகுப்பிற்கு மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பாடசாலைகளில் நடத்தப்பட்டன.
எவ்வாறாயினும், நாளை முதல் அனைத்து மாணவர்களையும் வழமை போன்று பாடசாலைகளுக்கு அழைக்குமாறு கல்வி அமைச்சினால் புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
கொவிட் 19 தொற்று காரணமாக பாடசாலைகளின் செயற்பாடு தொடர்பில் பிரச்சினை ஏற்பட்டால் வலயக் கல்விப் பணிப்பாளரின் அனுமதியுடன் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நாளைய தினத்தில் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.