முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இன்றையதினம் உயர்நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான இரண்டாவது வழக்கிற்காக அவர் உயர்நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
நீதித்துறையின் ஊழல்கள் குறித்து அவர் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக நீதிமன்றத்தை அவமதித்ததன் அடிப்படையில் ரஞ்சன் ராமநாயக்க தற்போது 4 வருட கடூழிய சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.
இதன் விளைவாக, அவர் 7 ஏப்ரல் 2021 அன்று தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தமை குறிப்பிடத்தக்கது.