பெரசிட்டமோல் மாத்திரையின் விலையை அதிகரித்து வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது
500Mg பெரசிட்டமோல் மாத்திரையின் அதிகபட்ச சில்லறை விலையை அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தலை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.
அதன்படி, 500Mg பெரசிட்டமோல் மாத்திரையின் விலையானது, ரூ. 2.30 ஆகும். முன்னதாக, 500mg பெரசிட்டமோல் மாத்திரை ரூ. 1.71ஆக இருந்தது.
அதற்கமைய பெப்ரவரி 28, 2022 முதல் அமுலுக்கு வரும் வகையில் 500mg பெரசிட்டமோல் மாத்திரைகளின் அதிகபட்ச சில்லறை விலையை அறிவிக்கும் வர்த்தமானி அறிவிப்பை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.
இதேவேளை நாட்டில் எதிர்வரும் 4 வாரங்களுக்கு பின்னர் அதிகளவிலான மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படக் கூடும் என இலங்கை ஒளடத ஒன்றியத்தின் தலைவர் ஏ.ஜே.பஸ்நாயக்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் டொலர் தட்டுப்பாடு காரணமாக மருந்து பொருட்களை இறக்குமதி செய்வதற்கான நாணய கடிதங்கள் விடுவிக்கப்படாமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்