பெலாரஸில் உள்ள இலங்கை மாணவர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்த நடவடிக்கை: பிரதமர்

Date:

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான யுத்த நிலைமைக்கு மத்தியில் பெலாரஸில் உயர்கல்வி கற்கும் இலங்கை மாணவர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ (02) வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் மொஸ்கோவிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

பெலாரஸ் அரச பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி கற்கும் சுமார் 1500 இலங்கை மாணவர்களின் பெற்றோர் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக விரைந்து செயற்பட்டு கௌரவ பிரதமர் இந்த அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளார்.

அதற்கமைய பெலாரஸிலுள்ள சுமார் 5,600 மாணவர்கள் உள்ளிட்ட இலங்கையர்கள் தொடர்பிலான நடவடிக்கைகள் பெலாரஸிற்கு அருகிலுள்ள இலங்கை தூதரகமான மொஸ்கோவிலுள்ள இலங்கை தூதரகத்தின் ஊடாக தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களுடன் கலந்துரையாடி சில வாரங்கள் கல்விப் பணிகளை தாமதிப்பது குறித்தும் அவர்களுக்கு ரஷ்யாவிற்கான விசாவினை பெற்று இலங்கைக்கு செல்வதற்கான வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் பிரதமர் ஆலோசனை வழங்கினார்.

Popular

More like this
Related

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரியாதிலுள்ள SLISR மாணவர்களினால் மனிதாபிமான உதவி.

 ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக...

மாலைதீவில் தமது பணியை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...