(File Photo)
பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு கடுமையான பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள இலங்கையை விட்டு வெளியேறி, தமிழகத்தின் ராமேஸ்வரம் கடற்கரையில் நான்காவது தீவில் சிக்கித் தவித்த மூன்று குழந்தைகள் உட்பட ஆறு இலங்கையர்களை இந்திய கடலோர காவல்படை மீட்டுள்ளது.
குறித்த ஒரு ஆண், அவரது மனைவி மற்றும் அவரது நான்கு மாதக் குழந்தை மற்றும் மற்றொரு பெண் மற்றும் அவரது ஆறு மற்றும் பன்னிரண்டு வயதுடைய இரண்டு குழந்தைகளும் அடங்குவர்.
இதன்போது குறித்த நபர்கள், இலங்கையில் உணவு கிடைப்பதில் சிரமம் இருப்பதாக அகதிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியக் கடலோரக் காவல்படையின் கட்டுப்பாட்டில் உள்ள அரிச்சல்முன்னைக்கு அப்பால் உள்ள நான்காவது தீவில் ஒரு படகுக்காரர் அவர்களை இறக்கிவிட்டார்.
பயணத்துக்காக படகோட்டிக்கு 50,000 ரூபாய் கொடுத்ததாகவும் ஏராளமானோர் படகுகளில் இந்தியா செல்ல காத்திருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
கடலோர காவல்படையினர் ஹோவர் கிராஃப்ட் மூலம் அவர்களை மீட்டனர். கடலோர காவல்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, உணவு வழங்கி, பொலிஸார் ஒப்படைத்து, மண்டபம் முகாமுக்கு அழைத்துச் சென்றனர்.