மூன்றாம் உலகப்போர் ஏற்பட்டால் பேரழிவு ஏற்படும்: உக்ரைன் எல்லையில் ரஷ்யா குவித்துள்ள அணு ஆயுதங்கள்!

Date:

மூன்றாம் உலகப்போர் ஏற்பட்டால் அணு ஆயுதங்களால் பேரழிவு ஏற்படும் என்று ரஷ்யா எச்சரித்துள்ளார்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதால் தீவிரமைடைந்து வரும் நிலையில் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைனை சுற்று வளைத்து ரஷ்ய படைகள் உக்கிரமான தாக்குதலை நடத்துவதால் அதிகளவான பேரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளது.

நாட்டைப் பாதுகாக்க உக்ரைன் படையினர் கடுமையாக போராடி வருவதுடன் தமது நாட்டுக்குள் நுழைந்த 6000 ரஷ்ய படையினரை கொன்றுள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு படைதரப்பு தெரிவித்துள்ளது.

இவ்வாறான நிலைமையில் உக்ரைனுக்கு நட்பு நாடுகள் ஆயுத உதவிகளை வழங்க முன்வந்துள்ளன.

இது தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ள ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கப்படுவதை அனுமதிக்க மாட்டோம் என்று கூறியுள்ளார்.

எனினும் மூன்றாம் உலகப்போர் ஏற்பட்டால் பெரும் பாதிப்பு ஏற்படும் மூன்றாம் உலகப் போரில் அணு ஆயுதற்களே அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

உக்ரைன் நகரங்களை பிடிக்க ரஷ்யா தீவிர தாக்குதலில் ஈடுபட்டுள்ள நிலையில் இப்போது எல்லையில் அணு ஆயுதங்களையும் ரஷியா குவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதற்கமைய உக்ரைன் எல்லையில் 1588 அணு ஆயுதங்கள் குவித்துள்ளதுடன் கைவசம் உள்ள அணு ஆயுதங்களின் எண்ணிக்கை 4369 ஆகும். அணு ஆயுத தாக்குதலில் ஈடுபட்டால் தரை வழி தாக்குதலுக்கு 812 ஏவுகணைகள் தயாராகவுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...