இரத்தினக்கல் மற்றும் ஆபரண இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவிற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் மற்றுமொரு இராஜாங்க அமைச்சு வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய களஞ்சிய வசதிகள், கொள்கலன் முனையங்கள், துறைமுக வழங்கல் வசதிகள், படகுகள் மற்றும் கப்பற்தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக லொஹான் ரத்வத்த நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து இன்றையதினம் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த பதவியினை வகித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர அண்மையில் விலகியிருந்ததுடன் குறித்த பதவிக்கு ஏற்பட்ட வெற்றிடத்திற்கு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.