ஹொரவ்பொத்தானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரெலபனாவ வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. ரெலபனாவ பாடசாலைக்கு முன்பாக ரெலபனாவ நோக்கிச் பெண் ஒருவரால் ஓட்டிச் செல்லப்பட்ட முச்சக்கரவண்டி ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்துள்ளது.
விபத்தில் முச்சக்கரவண்டியின் பின்பகுதியில் பயணித்த குழந்தையொன்று படுகாயமடைந்த நிலையில் ஹொரவ்பொத்தானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதே பகுதியில் வசித்து வந்த ஒன்றரை வயது குழந்தையே இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளது. அக்குழந்தையின் அனுராதபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
முச்சக்கர வண்டியை செலுத்தி வந்த பெண்ணின் அதிவேகமும் கவனக்குறைவும் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஹொரவ்பொத்தானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதினையும் அவதானிக்க முடிகின்றது.