இந்தியாவிடமிருந்து ஒரு பில்லியன் அமெரிக்க டொலரை கடனாக பெறும் ஒப்பந்தத்தில் இன்று கைச்சாத்திடப்படவுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் எஸ். ஆர் ஆட்டிகல தெரிவித்துள்ளார்.
எரிபொருள் கொள்வனவுக்காக வழங்கப்படும் கடனை 500 மில்லியன் அமெரிக்க டொலர்களில் இருந்து 750 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிக்குமாறு இந்தியாவிடம் இலங்கை கோரியுள்ளதாக தெரிய வருகிறது.
இதேவேளை, 1 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவிக்கான ஒப்பந்தத்தில் இந்தியாவும் இலங்கையும் இன்று மாலை 3.00 மணிக்கு கைசாத்திடவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் இருந்து அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்யப் பயன்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.