16 இந்திய மீனவர்கள் கைது: இலங்கை கடற்படையினர்!

Date:

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடிப்பில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பெயரில் 16 இந்திய மீனவர்கள் இரண்டு பகுதிகளில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று நெடுந்தீவு அருகே இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இலங்கை கடற்படையினர் ஒரு படகையும் அதிலிருந்த 4 மீனவர்களையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களை மயிலிட்டி துறைமுகம் அழைத்து வந்து கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினரிடம்
ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல இரணைத்தீவு அருகே அத்துமீறி மீன்பிடிப்பில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் முழங்காவில் கடற்படை முகாமிற்கு அழைத்து வந்து கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினரிடம்
ஒப்படைக்க நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

மொராக்கோவில் வெடித்த GenZ போராட்டம்: துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி!

மொராக்கோவில், அரசுக்கு எதிரான இளம் தலைமுறையினரின் நாடுதழுவிய மாபெரும் போராட்டத்தில், பொலிஸார்...

ரிஷாத் பதியுதீனின் அடிப்படை உரிமை மனு விசாரணை திகதி அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை...

வரலாற்றுத் தடம் பதித்த கள்-எலிய கலை விழா!

கவியரங்கு, கலை விழா மற்றும் மீலாத் கவிதை நூல் வெளியீடு உள்ளிடக்கிய ...