உக்ரைனின் நான்கு நகரங்களில் போர் நிறுத்தத்தை அறிவித்தது ரஷ்யா!

Date:

உக்ரைனில் நான்கு நகரங்களில் தங்காலிக போர் நிறுத்தத்தை ரஷ்யா அறிவித்துள்ளது.

இதற்கிடையில் தொடர்ந்து நடைபெற்று வரும் சண்டையால் கீவ், கார்கிவ், மரியபோல், சுமி ஆகிய நகரங்களில் இருந்து பொதுமக்கள் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டதுடன் போர் நிறுத்தப்படுவதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தலைநகரான கீவ் நகரை பிடிக்க ரஷ்ய திட்டமிட்டுள்ளது. கடல்வழி, தரைவழி, வான்வழி என மூன்று வழியாகவும் அதிரடி தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டியிருந்தார்.

உக்ரைனில் இருந்து அண்டை நாடுகளுக்கு மக்கள் வெளியேறினால் மட்டுமே, அவர்கள் சொந்த நாடுகளுக்கு திரும்ப முடியும் என்ற நிலை இருந்தது. இதனால் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், மக்கள் வெளியேறும் வகையில் போரை நிறுத்த வேண்டும் என ரஷ்யாவுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

அதனை ஏற்றுக்கொண்டு கீவ், கார்கிவ், மரியபோல், சுமி ஆகிய நான்கு நகரங்களில் போர் நிறுத்தப்படுவதாக ரஷ்ய அறிவித்துள்ளது.

இந்திய நேரப்படி மதியம் 12.30 மணியில் இருந்து பொதுமக்கள் வெளியேறுவதற்காக மனிதாபிமான பாதை திறந்து விடப்படும் என ரஷ்ய இராணுவம் அறிவித்துள்ளது.

இதேவேளை உக்ரைனில் இருந்து அண்டை நாடுகளுக்கு மக்கள் வெளியேறினால் மட்டுமே அவர்கள் சொந்த நாடுகளுக்கு திரும்ப முடியும் என்ற நிலை இருப்பதால் மக்கள் வெளியேறும் வகையில் போரை நிறுத்த வேண்டும் என பிரான்ஸ் அதிபர் ரஷ்யாவுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

இதன்படி குறிப்பிட்ட நகரங்களில் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ள ரஷ்யா படையினர் அந்த நகரங்களில் இருந்து பொதுமக்கள் வெளியேற பாதைகளை திறந்து வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

‘குர்ஆனின் வழியில் கருணை காட்டுங்கள்’; அனோஜனின் மரண தண்டனைக்கு எதிராக அலி சப்ரி குரல்

நபிகள் நாயகத்தின் கண்ணியத்தைப் பாதுகாப்பதைப் பற்றி பேசும் போதெல்லாம், அவரது கருணை,...

இரட்டையையாளர்களான மருத்துவத் துறை மாணிவிகள் இருவருக்கு ஐபேட் வழங்கி வைப்பு.

உலக முஸ்லிம் சமேலனம் (ராபிதத்துல் ஆலமில் இஸ்லாமி) – இலங்கை அலுவலகத்தின்...

சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அனோஜனின் குடும்பத்திற்கு ரிஷாட் பதியுதீன் நேரில் ஆறுதல்: விடுதலைக்கான தீவிர முயற்சி!

சவூதி அரேபியாவில் பணியாற்றும் இலங்கை பிரஜையான அனோஜன் சிவராசாவுக்கு மரண தண்டனை...

அனோஜன் வழக்கை உன்னிப்பாக அவதானிக்கும் இலங்கை அரசு!

சவூதி அரேபியாவில் தற்போது நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்பட்டுள்ள இலங்கைப் பிரஜையான அனோஜன்...