கொழும்பில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகம்: காமினி லொக்குகே

Date:

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு தேவையான எரிபொருள் இருப்புக்களை விநியோகிப்பதற்காக பெற்றோல் மற்றும் டீசல் கொண்ட எரிபொருள் பவுசர்கள் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே இன்று அறிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் குறிப்பிட்ட அமைச்சர், விநியோகத்தில் ஏற்பட்ட தாமதம் காரணமாக பல பகுதிகளில் நீண்ட வரிசைகள் தொடர்கின்றன.

அனைத்து பெற்றோல் தாங்கிகளும் நேற்று முன்தினமே செயற்பாடுகளை இடைநிறுத்தியுள்ளதாக தெரிவித்த அவர், இன்று முதல் அந்த பவுசர்கள் மீண்டும் செயற்படத் தொடங்கியுள்ளன என்றார்.

இதன்மூலம் கொழும்பில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகம் இன்று பிற்பகலில் நிறைவடையும் என அமைச்சர் லொக்குகே தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள ஒவ்வொரு எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் தலா ஒரு  பவுசர்  டீசல் மற்றும் பெற்றோல் வழங்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள டீசலுடன் கூடிய கப்பலை நாளை விடுவிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.

Popular

More like this
Related

நுகேகொட பகுதியில் சிறப்பு போக்குவரத்து திட்டம் அமுல்.

நுகேகொட ஆனந்த சமரக்கோன் திறந்தவெளி அரங்கில் இடம்பெற உள்ள பொதுக் கூட்டம்...

நுகேகொட பேரணி : ஒலி அமைப்புக்களின் பயன்பாட்டை குறைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தல்

மிரிஹான பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆனந்த சமரக்கோன் திறந்தவெளி அரங்கில் இன்று...

வடக்கு, கிழக்கு, வடமத்தியில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (21) நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை...

ஒரு நாளைக்கு சுமார் 25 கணினி குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகள் பதிவு

ஒரு நாளைக்கு சுமார் 25 கணினி குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகள் பதிவாகுவதாக...