தஃப்தர் ஜெய்லானி பள்ளிவாசல் கட்டிடங்கள் இடிக்கப்படுவது முஸ்லிம் அமைப்புகள் கவலை!

Date:

பலாங்கொடையில் உள்ள தஃப்தர் ஜெய்லானியின் பள்ளிவாசல் மற்றும் விகாரையின் எல்லைக்குள் உள்ள கட்டிடங்கள் இடிக்கப்படுவது குறித்து இலங்கையில் உள்ள முஸ்லிம் அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.

இந்த விடயம் தொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்ட முஸ்லிம் அமைப்புகள், பல நூற்றாண்டுகள் பழமையான மசூதி மற்றும் விகாரையின் சில பகுதிகளை தேவையற்ற முறையில் அழித்ததைக் கண்டித்துள்ளன.

இது தொடர்பில் அரசாங்கம் செயற்படாதமை குறித்து முஸ்லிம் அமைப்புகள் மேலும் விசனம் தெரிவித்துள்ளன.

பல நூற்றாண்டுகள் பழமையான பள்ளிவாசல் மற்றும் வழிபாட்டுத் தலத்தின் சில பகுதிகள் வரம்புமீறி, இடிக்கப்பட்டதை நாம் வன்மையாகக் கண்டிப்பதோடு, இவ்விடயத்தில் அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் மௌனமாக இருப்பதையிட்டு மிகவும் வேதனையடைவதாக குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முஸ்லிம்களிடத்தில் தப்தர் ஜெய்லானி 8 நூற்றாண்டுகளுக்கும் மேலாக முக்கியத்துவம் பெற்றுள்ளதோடு, இது பல நூற்றாண்டுகளாக முஸ்லிம்களின் கலாச்சார, பாரம்பரிய தளமாகவும் இருந்து வருகிறது.

இந்த இடம் 12 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் வாழ்ந்த சூஃபி துறவியும் காதிரி சூஃபி வழிமுறையின் ஸ்தாபகருமான அஸ்-ஸெய்யத் முஹியத்தீன் அப்துல் காதிர் ஜெய்லானி என்பவரின் பெயரைப் பெற்றுள்ளது.

காலணித்துவ ஆய்வுகளின் ஒரு பகுதியாக இலங்கையின் தொல்பொருள் பாரம்பரியத்தை 1930களின் முற்பகுதியில் ஆய்வுசெய்த பிரிட்டனின் தொல்பொருள் ஆய்வாளரான சி.எச். கொல்லின்ஸ், 1932 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அவரது அறிக்கையில், ‘இது முஸ்லிம்களின் புனித யாத்திரைக்கான சிறந்த இடம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

தொல்பொருள் திணைக்களத்தின் அதிகாரத்தின் கீழ் பாதுகாப்பளிக்கப்பட்ட புராதன தளமான இவ்விடத்தில் புதியதோர் பௌத்த தூபி நிர்மாணிக்கப்பட்டுள்ள அதேவேளை, தப்தர் ஜெய்லானியின் முக்கிய கொடிக் கம்பம் மற்றும் செதுக்கிய கற்படிகளுடன் கூடிய அலங்கார நுழைவாயல் இடிக்கப்பட்டமை வருத்தமளிப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தோடு, இவ்வாறான செயற்பாடுகள் சர்வதேசத்தின் பார்வையிலும், குறிப்பாக சர்வதேச அரங்கில் இலங்கைக்கு ஆதரவாக நிற்கும் முஸ்லிம் நாடுகளுக்கு மத்தியிலும் அவப்பெயரை ஏற்படுத்தக்கூடும்.

ஐநா மனித உரிமைகள் சபையின் 49 ஆவது கூட்டத் தொடர் 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி வரை நடைபெற்று வருகின்ற நிலையிலேயே, இந்த இடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடந்த காலங்களில் சமூக அடையாளங்கள், மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் சொத்துக்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டவர்கள் மற்றும் எங்கிருந்து அத்தகைய வெறுப்புகள் தூண்டப்பட்டன போன்றன குறித்து விரிவான ஆதாரங்களுடன் அடையாளம் காட்டப்பட்டாலும், குற்றம் இளைத்தவர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளும் தொடர்ந்தும் எடுக்கப்படாமல் இருப்பதை கவலையுடன் சுட்டிக்காட்டுகிறோம்.

இவ்வாறான செயற்பாடுகளுக்கு பாரபட்சமின்றி சட்டத்தை நிலைநாட்டுவதன் மூலம் இப்பிரச்சினைக்கு முடிவு கட்டுமாறு நாம் அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம் எனவும் முஸ்லிம்கள் அமைப்பக்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளன.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...