‘தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் யாரும் முதலீடு செய்ய முன்வர மாட்டார்கள்’: ஐ.தே.க

Date:

தற்போதைய பொருளாதார நெருக்கடியின் தவறான முகாமைத்துவத்தினால் சர்வதேச சமூகத்தினுள் நம்பிக்கை இழந்துள்ளதால் எமது நாட்டுடன் முதலீடு செய்ய மாட்டார்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

‘நாட்டின் தற்போதைய சூழ்நிலையின் காரணமாக உலக அளவில் ஒரு முதலீட்டாளர் கூட இலங்கையில் முதலீடு செய்யமாட்டார்கள்.

இதற்குக் காரணம் நாட்டிற்குள் உள்ள தவறான நிதி மேலாண்மை மற்றும் நெருக்கடியால் இழந்த நம்பிக்கையே என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

மக்கள் 3 வேளை உணவு கிடைக்காமல், இயல்பு வாழ்க்கைக்குள் வாழ முடியாமல் தவிக்கின்றனர், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பாடசாலைக்கு அனுப்ப முடியாமல் தவிக்கின்றனர், மக்களின் வாழ்வாதாரம் பறிபோகாமல் பார்த்துக் கொள்வது அரசின் கடமை,” என்றார் அபேவர்தன.

இலங்கை அரசாங்கம் தாமதமின்றி சர்வதேச நாணய நிதியத்தை (ஐஆகு) அணுகி சாத்தியமான அனைத்து உதவிகளையும் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

‘அரசு உடனடியாக சர்வதேச நாணய நிதியத்தை அணுக வேண்டும். இந்த மாதிரியான அரசாங்கம் தான் தற்போது நாட்டை ஆள்கிறது, அவர்களால் தங்கள் கடமைகளைச் செய்ய முடியாவிட்டால் பதவியிலிருந்து விலகி நிலைமையைக் கையாளக்கூடிய ஒரு தரப்பிடம் ஒப்படைப்பது நல்லது, ‘என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...