தொடரும் எரிபொருள் நெருக்கடி தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்த கருத்து தொடர்பில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச கடுமையாக சாடியுள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற ஒரு கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், நாட்டில் உண்மையான எரிபொருள் நெருக்கடி இல்லை என்றும், சில முறையற்ற சில விடயங்களாலும் எரிபொருள் நெருக்கடி என்ற தவறான கருத்து காரணமாகவே மக்கள் அச்சத்தில் உள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.
துறைமுகத்தில் எரிபொருள் தாங்கிகள் நிறுத்தப்பட்டு, இறக்குதல் மற்றும் விநியோகம் மட்டுமே எஞ்சியுள்ளதாகவும், கடந்த காலங்களில் 24 மணித்தியாலங்களுக்கு மட்டுமே எரிபொருள் கிடைக்கும் காலங்கள் இருந்ததாகவும் அவர் கூறினார்.
இந்த அறிக்கை தொடர்பில் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் வீரவன்ச, இந்த விடயம் தொடர்பில் பிரதமரின் கருத்து தொடர்பில் தாம் வருத்தமடைவதாகவும், இது ஒரு முட்டாள்தனமான அறிக்கை எனவும் சாடியுள்ளார்.
சில நாட்களுக்கு எரிபொருள் பற்றாக்குறையால் எரிபொருள் நெருக்கடி ஏற்படாது என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் வீரவன்ச, எதிர்வரும் நாட்களில் எரிபொருள் நெருக்கடியை முழுமையாக தீர்க்குமாறு அரசாங்கத்திற்கு சவால் விடுத்துள்ளார்.
இதேவேளை விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் இந்த தருணத்தில் எதிர்க்கட்சியில் தனிக் குழுவாக செயற்பட வேண்டும் என எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.
அரசாங்கத்திற்குள் இருந்துகொண்டு விமர்சனங்களை முன்வைப்பதற்குப் பதிலாக, மூன்று உறுப்பினர்களும் எதிர்க்கட்சியில் அமர்ந்து அரசை விமர்சிக்க வேண்டும் எனக் கூறினார்.