‘பொருளாதார விளைவுகளை எதிர்கொள்ளத் தயாராக இருக்கின்றோம்’: ஐ.நா.வில் பீரிஸ்

Date:

பயங்கரவாத தடைச் சட்டம் விசாரணைக்காக தடுத்து வைக்கப்படுதல் மற்றும் விசாரணை ஆகியவற்றுக்கு உட்பட்ட நபர்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், கருத்துச் சுதந்திரத்தை கட்டுப்படுத்தக் கூடாது என்பதில் இலங்கை உறுதியாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது அமர்வில் உரையாற்றிய போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

அதன் பிரகாரம், பயங்கரவாதத் தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டு 43 வருடங்களின் பின்னர், அதனைத் திருத்துவதற்கான ஆரம்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறினார்.

மேலும் ஐரோப்பாவில் நிலவுகின்ற மோதல் நிலைமைகளால் ஏற்படவுள்ள பாதகமாக பொருளாதார விளைவுகளை எதிர்கொள்ளத் தயாராக இருக்கின்றோம்.

அரசியலமைப்பில் உள்ள அடிப்படை உரிமைகள் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட எமது அரசாங்கத்தின் அமைப்புக்களின்மூலம் படிப்படியாக முன்னேறி சாமாதானம், பாதுகாப்பு, மற்றும் சட்டத்தின் ஆட்சியை மீட்டெடுத்துள்ளோம். என்றும் அவர் கூறியுள்ளார்.

மனித உரிமைகள் தொடர்பில் ஐ.நாவிடம் உள்ள கணிசமான நிபுணத்துவம் மற்றும் அதன் தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் திறன் அபிவிருத்தித்திட்டங்கள் ஆகியவற்றின் மூலம் நாங்கள் பயனடைந்துள்ளோம். என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு. எமது உள்நாட்டுக்கட்டமைப்பு மற்றும் சர்வதேச கடப்பாடுகளுக்கு அமைய இன மற்றும் மத அடையாளம் மற்றும் அரசியல் சார்பு எதுவுமின்றி எமது பிரஜைகள் அனைவரினதும் மனித உரிமைகள் மற்றும் சமூக நீதியை மேம்படுத்தி பாதுகாப்பை நாங்கள் தொடர்ந்து உறுதி செய்னகின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச சமூகத்தின் அபிவிருத்தியடைந்து வரும் உறுப்பு நாடாக நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைந்து கொள்வதற்கான எமது முயற்சிகளில் தாக்கத்தை ஏற்படுத்துகின்ற தொற்று நோய் மற்றும் ஐரோப்பாவில் நிலவுகின்ற மோதல் போன்ற நெருக்கடி மிகுந்த கூழ்நிலைகளினால் மேலும் ஏற்படவிருக்கின்ற பாதகமான பொருளாதார விளைவுகளை எதிர்கொள்ளத் தயாராக இருக்கின்றோம்.

இதேவேளை இலங்கையின் அனுமதியின்றி கொண்டுவரப்பட்ட 46/1 தீர்மானத்தின் ஊடாக பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக நல்லிணக்க முயற்சிகளுக்கு தடைகளை ஏற்படுத்தவும், கடந்த கால நிகழ்வுகளை மீட்பதன் காரணமாக வெறுப்பை வளர்க்க மட்டுமே முடிந்தது என்றும் குற்றம் சாட்டினார்.

ஆகவே தாம் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் நடைமுறைப்படுத்தப்படும் சாட்சியம் சேகரிக்கும் பொறிமுறையை எதிர்ப்பதாகவும் கருத்துச்சுதந்திரம் போன்ற ஜனநாயக சுதந்திரங்களைக் கட்டுப்படுத்தக் கூடாது என்றும் இலங்கை உறுதியாக நம்புவதாக வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...