மாஸ்கோ: உக்ரைன் மீதான போருக்கு நடுவே ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் ஆலோசகர் அனடோலி சுபைஸ் பதவி விலகியதோடு, நாட்டை விட்டு வெளியேறினார். இனி ரஷ்யாவுக்கு அவர் திரும்ப போவதில்லை எனவும், உக்ரைன் மீதான போரை கண்டித்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த மாதம் 24ல் போரை துவக்கியது. தற்போது வரை உக்ரைனில் இருநாட்டு படை வீரர்கள் இடையே மோதல் நடக்கிறது. மேலும், ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறார்.
இதனால் உக்ரைனும், அந்நநாட்டு மக்களும் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். போர் தொடங்கி ஒரு மாதமாகியும் ரஷ்யாவால், உக்ரைன் தலைநகர் கீவ் நகரை இன்னும் கைப்பற்ற முடியவில்லை.