அலரி மாளிகையில் தற்சமயம் முக்கிய கலந்துரையாடல்!

Date:

நாட்டில் இடம்பெறும் பாரிய பிரச்சனைகளுக்குத் தீர்வுகாணும் வகையில் தற்போது மிக முக்கியமான கலந்துரையாடல் ஒன்று அலரி மாளிகையில் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது மகிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச தவிர்ந்த ஏனைய அனைத்து ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் முக்கியமான தீர்மானமொன்றை எடுக்கவுள்ளதாக அறிய முடிகின்றது.

தற்போது நடைபெற்று வரும் கலந்துரையாடலின் பின்னர் முக்கிய தீர்மானங்கள் பல எடுக்கப்படலாம் எனவும் மாற்றங்கள் பல நேரலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று இரவு திடீரென கூட்டப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் ஆளும் கட்சியின் பெரும்பான்மையானோர் பங்கேற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சரவைக் கூட்டத்தில் அரசாங்கத்தின் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆராயப்பட்டதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், பலம் வாய்ந்த அமைச்சர்கள் ஓரிருவர் தமது பதவிகளை இராஜினாமா செய்ய தீர்மானிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக பிரதமர் தனது பதவி தொடர்பில் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் எடுப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அவர் பதவி விலகினால் அமைச்சரவை கலைக்கப்பட்டு காபந்து அரசாங்கம் நியமிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
புதிய பிரதமராக டலஸ் அழகப்பெரும, ரணில் விக்கிரமசிங்க மற்றும் தினேஷ் குணவர்தன ஆகியோரும் புதிய காபந்து அரசாங்கத்தின் நிதி அமைச்சராக ஹர்ஷ டி சில்வா நியமிக்கப்பட உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...

கம்பஹாவின் பல பகுதிகளில் 10 மணி நேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (14) 10 மணி நேர...