(File Photo)
சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்தை நியமிக்கும் யோசனைக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமரிடமிருந்து சாதகமான பதில் கிடைத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவுடன் இணைந்து ஜனாதிபதி மற்றும் பிரதமரை தனித்தனியாக சந்தித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் வீரவன்ச தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர் விமல், உதய கம்மன்பில, வாசுதேவ ஆகியோர் ஜனாதிபதியையும் பிரதமரையும் சந்தித்து இவ் விடயமாக பேசியதாக விமல் தெரிவிததார்.
தற்போது உள்ள அரசை கலைத்துவிட்டு பாராளுமன்றத்தில் உள்ள சகல அரசியல் கட்சிகளைக் அழைத்து இவ் விடயம் மாக கலந்து ஆலோசித்து தற்காலிக அரசை உரிய கட்சிகளின் தொகைக்கேற்ப அமைச்சரவை பங்கீட்டு தற்காலிக அரசொன்றை நிறுவதற்கு இருவரும் சம்மததம் தெரிவிததாக அமைச்சர் விமல் சற்று முன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.