இந்திய அரசினால் அன்பளிப்பு செய்யப்பட்ட 101 வகையான மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்கள் எதிர்வரும் புதன்கிழமை இலங்கை வந்தடையும் என சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.
அதேநேரம், மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்கள் இந்திய கடற்படைக்கு சொந்தமான காரியல் கப்பல் மூலம் இலங்கை வந்தடையும் என்று அவர் கூறினார்.
இதேவேளை, இலங்கைக்கு நன்கொடையாக ஒரு வாரத்திற்குள் இந்தோனேசிய அரசாங்கத்திடமிருந்து 340 மில்லியன் ரூபாள் மதிப்புள்ள அத்தியாவசிய மருந்துகள், கிடைக்கபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் வெளிநாட்டில் இருந்து மேலும் நன்கொடைகளை எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
போதைப்பொருள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்துள்ளதாகவும் வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்கள் இதற்கான உதவிகளை செய்து வருவதாகவும் சன்ன ஜயசுமண தெரிவித்தார்.