சிஸ்தான்-பலுசிஸ்தானில் துப்பாக்கிச் சூடு: ஈரானின் புரட்சிக் காவலர் படைப் பிரிவின் ஜெனரல் உயிர் தப்பினார்!

Date:

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டிய மாகாணமான சிஸ்தான்-பலூசிஸ்தானில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஈரானின் புரட்சிக் காவலர் படைப் பிரிவின் மெய்க்காப்பாளர் கொல்லப்பட்டார்.

அதேவேளை சிஸ்தான்-பலூசிஸ்தான் மாகாணத்தில் பிரிகேடியர்-ஜெனரல் ஹொசைன் அல்மாசி, சனிக்கிழமை பதுங்கியிருந்து காயமின்றி உயிர் பிழைத்ததாக ஈரான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாட்டின் தென்கிழக்கில் ஈரானின் சக்திவாய்ந்த இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) ஜெனரல் ஒருவரை ஏற்றிச் சென்ற வாகனத்தின் மீது துப்பாக்கி ஏந்திய நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

மேலும் ஈரானின் தென்கிழக்கு மாகாணத்தில் உள்ள ஒரு சோதனைச் சாவடியில் ‘குற்றவாளிகள்’ துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அந்த நிறுவனம் கூறியது.

இது பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதியில் சிறுபான்மை பிரிவினைவாதிகள், பிற ஆயுதக் குழுக்கள் மற்றும் ஈரானியப் படைகளுக்கு இடையே மோதல்கள் நடந்தன.

இந்தத் தாக்குதலுக்குப் பின்னணியில் இருந்தவர்களை, மாகாணத் தலைநகரான ஜாஹெடானுக்கு அருகே பாதுகாப்புப் படையினர் கைது செய்தது.

இதேவேளை கொல்லப்பட்ட மெய்க்காப்பாளர் மஹ்மூத் அப்சலான், பிராந்தியத்தில் உள்ள மற்றொரு IRGC தளபதியான ஜெனரல் பர்விஸ் அப்சலனின் மகன் என அடையாளம் கண்டுள்ளது.

ஏழ்மையான மாகாணமான ஆப்கானிஸ்தான் ஓபியம் மற்றும் ஹெராயின் ஒரு பெரிய கடத்தல் பாதையாகும், இது குற்றக் கும்பல்களுக்கும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கும் இடையிலான மோதல்களுக்கு ஒரு முக்கிய புள்ளியாக அமைகிறது.

1979 இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு புரட்சிக் காவலர் நிறுவப்பட்ட ஆண்டு நிறைவைக் குறிக்கும் நிகழ்விலேயே இந்தத் தாக்குதல் நடந்தது.

இஸ்ரேலின் மொசாட் உளவு நிறுவனத்துடன் தொடர்புடையதாகக் கூறிய மூன்று பேர் சிஸ்தான்-பலூசிஸ்தானில் கைது செய்யப்பட்டதாக ஈரான் அறிவித்த இரண்டு நாட்களுக்குப் பிறகு சனிக்கிழமையன்று பயங்கர துப்பாக்கிச் சூடு நடந்தது.

2019 ஆம் ஆண்டில், ஈரானின் மிகவும் சக்திவாய்ந்த இராணுவ நிறுவனத்தின் மீதான துணிச்சலான தாக்குதல்களில் ஒன்றான சிஸ்தான்-பலூசிஸ்தானில் ஒரு தற்கொலை குண்டுதாரி 27 புரட்சிகர காவலர்களைக் கொன்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது தேசிய மீலாத் விழா நிகழ்வுகள் இம்முறை ஹம்பாந்தோட்டையில்..!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது தேசிய மீலாத் விழா நிகழ்வுகள்...

பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் முறையிடுவதற்கு வாட்ஸ்அப் தொலைபேசி இலக்கம் அறிமுகம்

நாட்டில் இடம்பெறும் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் முறையிடுவதற்கு வாட்ஸ்அப் தொலைபேசி...