சுதந்திர சதுக்கத்திற்கு அருகில் எதிர்கட்சியினர் போராட்டம் நடத்தியதால் பதற்றமான சூழ்நிலை!

Date:

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்ட பேரணி சுதந்திர சதுக்கத்திற்கு அருகில் பொலிஸாரால் தடுக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் நிலையில் சஜித் தலைமையிலான இந்த ஆர்ப்பாட்டத்தை பொலிஸார் தடுத்துள்ளனர்.

எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹர்ஷடி சில்வா, சரத் பொன்சேகா, நளின் பண்டார, கபிர் காசிம், ஹக்கீம், முஜீப்பு ரகுமான், ராஜித சேனாரத்ன, மனோ கணேசன், மனுச நாணயக்கார, ரஞ்சித் மத்துமபண்டார, வடிவேல் சுரேஸ் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களே இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவினை மீறிய குற்றச்சாட்டில் 664 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று மாலை 6 மணி முதல் இன்று காலை வரையான காலப்பகுதியில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டில் நேற்று மாலை 6 மணி முதல் திங்கட்கிழமை அதிகாலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை மீறிய குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அரசாங்கத்திற்கு எதிராக இன்று நாடு முழுவதும் பாரிய ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்க தயாராக இருந்த நிலையில், ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

அரச விடுமுறையில் மாற்றம்!

2026ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் உற்சவத்தின் உத்தியோகபூர்வ நிகழ்வு மே மாதம்...

A/L பரீட்சை விண்ணப்ப காலம் நள்ளிரவுடன் நிறைவு

2026 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகலில் பலத்த மழைக்கு வாய்ப்பு!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது...

புனித ஹஜ் பயணம் ஆரம்பம்: சவூதி அரேபியாவிற்கு வருகை தந்துள்ள இந்திய உள்ளிட்ட நாடுகளின் முதல் குழுவினர்!

இஸ்லாமியர்களின் மிக முக்கிய வருடாந்த புனிதப் பயணமான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக...