சுயாதீன பாராளுமன்ற உறுப்பினர்கள் சீன தூதுவரை அவசரமாக சந்திப்பு!

Date:

பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் ஒரு சில பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கொழும்பிலுள்ள சீன தூதுவர் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார். சுயாதீனமாக செயற்படும் 7 உறுப்பினர்களை அவர் சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையின் தற்போதைய நிலைமை மற்றும் சீனாவினால் இலங்கைக்கு வழங்கப்படும் உதவிகள் குறித்து இதன்போது கலந்துரையாடல் நடத்தப்பட்டதாக இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவிக்கின்றது.

இலங்கைக்கு தொடர்ச்சியாக உதவிகளை வழங்குமாறு சுயாதீன உறுப்பினர்கள் சீன தூதுவரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர்களான அத்துரெலிய ரத்தன தேரர், வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில, தயாசிறி ஜயசேகர, அநுர பிரியதர்ஷன யாப்பா, வீரசுமன வீரசிங்க மற்றும் ஜகத் புஸ்பகுமார ஆகியோரே இவ்வாறு சீன தூதுவரை சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியுள்ளனர்.

Popular

More like this
Related

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...

புத்தளம் ஆதார வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ்:

தற்போது வடமேல் மாகாண சபையின் கீழ் இயங்கி வரும் புத்தளம் ஆதார...

ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியுடன் ஜனாதிபதி அநுர பேச்சு!

ஐக்கிய அரபு அமீரகம் அண்மையில் எதிர்கொண்ட தாக்குதல்கள் குறித்துத் தனது கவலையைத்...

இலங்கை கடற்பரப்பில் ஈரானிய கப்பல் மீதான தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் மாயம்: ரெய்ட்டர்ஸ் தகவல்

இலங்கை கடற்கரையில் ஈரானிய கப்பலின் மீது சந்தேகத்திற்கிடமான நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய...