துருக்கி ஜனாதிபதி சவூதி விஜயம்: ‘இரு நாடுகளுக்கிடையில் நம்பிக்கை அடிப்படையில் ஒன்றிணையவுள்ளோம்’

Date:

சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் மற்றும் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோர் துருக்கி ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகனை ஜெட்டா நகரில் வரவேற்றுள்ளார்.

இதன்போது, துருக்கி ஜனாதிபதிக்கு உத்தியோகபூர்வ வரவேற்பு மற்றும் இரவு விருந்து இடம்பெற்றதுடன் வரவேற்பு நிகழ்ச்சியில் இருதரப்பு மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பட்டத்து இளவரசர் மற்றும் எர்டோகன் சவூதி-துருக்கிய உறவுகள் மற்றும் அனைத்து துறைகளிலும் அவற்றை மேம்படுத்துவதற்கான வழிகளை மதிப்பாய்வு செய்தனர். சமீபத்திய பிராந்திய மற்றும் சர்வதேச முன்னேற்றங்களுக்கான முயற்சிகள் குறித்தும் இருதரப்பினரும் விவாதித்தனர்.

மேலும், துருக்கி ஜனாதிபதி மக்காவில் உம்ரா செய்ததுடன் அவரை மசூதியின் உயர் அதிகாரிகள் வரவேற்றதுடன் மக்காவின் ஆளுநர் இளவரசர் காலித் அல்-பைசல் ஜித்தா நகரில் வைத்து,வரவேற்றார்.

இதேவேளை, ‘துருக்கி மற்றும் சவூதி அரேபியா இடையேயான உறவுகளின் அனைத்து அம்சங்களும் மதிப்பாய்வு செய்யப்படுவதுடன் மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட நடவடிக்கைகள் இந்த பயணத்தின் ஒரு பகுதியாக நடைபெறும் பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்பட்டது.

இருதரப்பு உறவுகளைத் தவிர, பிராந்திய மற்றும் சர்வதேச விடயங்களில் கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப்படும், ‘என்று ஒரு துருக்கி வெளியட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘இரு சகோதர நாடுகளாக ஒத்துழைப்பின் புதிய சகாப்தத்தை தொடங்குவதற்கான எங்களது கூட்டு விருப்பத்தை எனது வருகை பிரதிபலிக்கிறது.

அரசியல், இராணுவம், பொருளாதாரம் மற்றும் கலாச்சாரம் உள்ளிட்ட அனைத்து அம்சங்களிலும் எங்கள் இரு நாடுகளுக்கும் இடையே மேம்பட்ட உறவுகளின் புதிய சகாப்தத்தைத் தொடங்க நாங்கள் முயற்சிகளை மேற்கொள்வோம், ‘என்று எர்டோகன் கூறினார்.

‘வர்த்தகம் மற்றும் முதலீடுகள் மற்றும் எங்கள் ஒப்பந்தக்காரர்களால் செயல்படுத்தப்படும் பெரிய அளவிலான திட்டங்களின் அடிப்படையில் சவூதி அரேபியா துருக்கிக்கு ஒரு சிறப்பு இடத்தை பெற்றுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2017 இற்குப் பிறகு சவூதி அரேபியாவிற்கு துருக்கிய அதிபதி விஜயம் செய்தும் முதல் பயணமாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...