பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சமையல்காரர் 3 ஆண்டுகளுக்குப் பின் பிணையில் விடுதலை!

Date:

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபரினால் வழங்கப்பட்ட பிணைக்கு சம்மதம் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து கெகுனுகொல்லாவையைச் சேர்ந்த அசனார் முஹம்மது ரமீஸ் என்பவரை கொழும்பு மேலதிக நீதவான் திருமதி பி. என். எல். மஹவத்த முன்னிலையில் நேற்றைய தினம் (26) செவ்வாய்க்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டார்.

மேற்படி ரமீஸ் என்பவர் கெக்குனுகொல்லாவை மடலெஸ்ஸ பகுதியைச் சேர்ந்த ஒரு பிரபல சமையல்காரர் ஆவார் என்றும் அவர் எந்த ஒரு பயங்கரவாதச் செயலிலும் ஈடுபட்டதில்லை என்றும், அவர் மூன்று ஆண்டு காலம் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி எம். எம். சுஹைர் அவர்கள் ஜனாதிபதியின் ஆலோசனைச் சபையில் தொடரச்சியாக முறைப்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஈஸ்டர் குண்டு சம்பவத்தன் சூத்திரதாரி ஸஹ்ரான் ஹரிமை ரமீஸுக்கு தெரியும் என்பதே அவர் மீதான சந்தேகத்திற்க முக்கிய காரணம் எனவும் ஆனால் ரமீஸ் வசிக்கும் அதே கிராமத்தில் ஸஹ்ரான் பெண் எடுத்திருந்தார் என்பதும் ஸஹ்ரானுடைய விருந்துகளுக்கும்  சமையல் வேலை செய்தவர் என்பதைத் தவிர இருவருக்கும் இடையில் எந்த விதமான உறவோ தொடர்போ இருந்ததில்லை என்பதே உண்மையாகும்.

ரமீஸ திருமண வைபவங்கள் மற்றும் விழாக்களுக்கு சமையல் வேலை செய்து கொடுப்பவராக மிகவம் பிரகல்யம் வாய்ந்தவராக இருந்தார்.

இந்த அடிப்படையில் 3 சந்தர்ப்பங்களில் பயங்கரவாதி என பின்னால் தெரிய வந்த ஸஹ்ரானின் வைபவங்களுக்கும் ரமீஸ் சமையல் வேலை செய்துள்ளார் என ரமீஸுக்காக வாதாடிய வக்கீல்கள் முன்னாள் பிரதம நீதியரசர் அசோக டி சில்வா தலைமையிலான ஆலோசனைக் குழுவிடம் எடுத்துக் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இருந்தபோதிலும் அவர் அநியாயமான விதத்தில் 3 வருடங்கள் தடுப்புக் காவலில் துண்பப்பட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் சூத்திரதாரி இந்த சஹ்ரான் தான் என்பதை தொலைக்காட்சி செய்திகள் மூலமே ரமீஸ் முதல் முiயாக அறிந்துள்ளார்.

ஆனால் ரமீஸுக்கும் ஈஸ்டர் தாக்குதலுக்கு எந்த தொர்பும் இல்லை எனவும், அதற்கான எந்த ஆதாரமும் கிடையாது எனவும் வழக்கறிஞர்கள் பல முறை ஆலோசனைக் குழுவிடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இறுதியில் 3 வருடங்களக்க பின் ரமீஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...