நாட்டில் எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியை நன்கு அறிவேன் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், இன்றைய தினம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் தான் சுயேட்சையாக இருப்பதாக முடிவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது புதிய அரசியல் கலாசாரமொன்று மக்களுக்கு தேவை என்றும் நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பொதுமக்களின் துயர் அப்போது களையப்படவும் வேண்டும். நான் கொண்ட அதிருப்தியை பல தடலை பாராளுமன்றத்தில் வெளிப்படுத்தியுள்ளேன்.
ஒரு மக்கள் பிரதிநிதியாக மக்கள் பிரச்சினைகளை இணங்கண்டு அவற்றுக்கான தீர்வுகளை பெற்றுக்கொண்டு நான் முனைப்புடன் செயற்பட்டு வந்துள்ளேன்.
அத்தோடு நாட்டு மக்கள் முன்னெடுத்துவரும் போராட்டம் புதிய அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்த வேண்டும் என் என்ற விடயமே முதன்மையளிக்கின்றது.
எனவே மக்கள் எதிர்கொண்டு இன்னல்களை சரியாக அடையாளம் கண்டுகொண்டு ஆளும் தரப்பாலும் எதிர் தரப்பாலும் எந்த சரியா முன்மொழிவுகளையும் இதுவரை முன்வைக்கவில்லை.
எவ்வாறாயினும் இன்று பாராளுமன்றத்தில் மக்கள் பக்கமாக நின்று சுயேட்சையாக இருக்க முடிவெடுத்துள்ளேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப்பிடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சாணக்கியன் சபையில் பணத்தை வழங்கியதால், அமளிதுமளி ஏற்பட்டுள்ளது.
சபையில் உரையாற்றிக் கொண்டிருந்த முஷாரப்பிடம், சாணக்கியன் 5000 ரூபா தாளை கையளித்துள்ளார்.
இதையடுத்து, புலம்பெயர் தமிழர்களுக்கு இந்த பணத்தை வழங்குமாறு முஷாரப் பதிலளித்துள்ளார்.