‘அடுத்த வாரம் நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிக்கப்படும்’

Date:

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை அடுத்த வாரம் சபாநாயகரிடம் கையளிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தெரிவித்தார்.

சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதேநேரம், நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு 125 பேர் கையெழுத்திட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் 11 கட்சி குழு மற்றும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பத்து சுயேட்சை உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர்கள் இன்று என்ன செய்வார்கள் என்பதை நாடு எதிர்ப்பார்த்திருப்பதாகவும், அசோக அபேசிங்க மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

காஸாவில் போர் நிறுத்தம்: குனூத் அந் நாஸிலாவை நிறுத்திக் கொள்ளுமாறு ஜம்மியத்துல் உலமா வேண்டுகோள்

காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக இதுவரை ஒதப்பட்டு வந்த இன்று முதல்...

இரண்டு ஆண்டுகள் முடக்கத்தில் இருந்த பள்ளிவாசல்: சுத்தம் செய்யத் தொடங்கிய காசா மக்கள்

 யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து நிலைமைகள் சீராகத் தொடங்கியுள்ள நிலையில் மஸ்ஜித் ஸுஹதா...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்தார் ஞானசார தேரர்

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட...

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம்

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக,...