(File Photo)
அமைச்சரவையின் இராஜினாமா கடிதங்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் உத்தியோகபூர்வமாக இன்று கையளிக்கப்பட்டவுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று அதனை ஏற்றுக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்றையதினம், அமைச்சர்கள் தமது இராஜினாமா கடிதங்களில் கையொப்பமிட்டு, அலரி மாளிகையில் பிரதமரிடம் கையளித்ததுடன், அமைச்சரவை இராஜினாமாக்கள் தொடர்பில் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதிக்கு அறிவிக்க பிரதமர் இன்று ஜனாதிபதியை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவை தவிர்ந்த அமைச்சரவையிலுள்ள அனைத்து அமைச்சர்களும் நேறடறு பதவி விலக தீர்மானித்தனர்.
அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் வலுப்பெற்று வரும் பின்னணியில் இவ்வாறு அனைத்து அமைச்சர்களும் பதவி விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது