அம்பாறை மாவட்டத்தில் கடந்த பல வாரங்களாக இருந்து வந்த பெட்ரோலுக்கான கியுவரிசை குறைந்து வருவதை காணக்கூடியதாக உள்ளது. மாவட்டத்திலுள்ள சகல எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் கடந்தகாலங்களில் 2 கிலோ மீட்டருக்கும் கூடுதலான (கியு) வரிசை இருப்பதைக் காண முடிந்தது.
மக்கள் இதன் மூலமாக பலத்த சிரமத்தை எதிர் நோக்கினார்கள். வாகன ஓட்டமும் குறைந்திருந்து காணப்பட்டது . ஆனால் இன்றைய தினம் இந்த (கியூ) வரிசை நன்றாக குறைந்து வருவதை காண முடிகின்றது.
இன்று அதிகமான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் 10 பேருக்கு உட்பட்டவர்களே நிற்றப்பாதை அவதானிக்க முடிந்தது.
தற்போது பெட்ரோல், டீசல் தாராளமாக பெற்று வருகின்றார்கள்.
டீசலுக்கான வரிசையும் நன்றாக குறைந்துவிட்டது.