அரசாங்கத்தின் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் தனியான சுயேச்சைக் குழுவாக தங்களை பிரதிநிதித்துவப்படுத்த தீர்மானித்துள்ளதாக அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா பாராளுமன்றத்திற்கு தெரிவித்தார்.
அத்தோடு 16 பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து தனி சுயேட்சை குழுவாக தங்களை பிரதிநிதித்துவப்படுத்த தீர்மானித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 15 பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து தனியான சுயேட் சைக் குழுவாக தம்மைப் பிரதிநிதித்துவப்படுத்த தீர்மானித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நேற்றைய தினம் அரசாங்கத்தில் இருந்து விலகியதோடு இன்று பாராளுமன்றம் கூடும் போது சுயேச்சைக் குழுவாக செயற்படும் என அறிவித்தது.
இதேவேளை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், பாராளுமன்றத்தில் சுதந்திரமாக இருக்க கட்சி தீர்மானித்துள்ளது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப்பும் சுயேட்சையாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
113 ஆசனங்களுடன் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவை வெளிப்படுத்தும் எந்தவொரு குழுவிற்கும் ஆட்சி அமைக்க அதிகாரத்தை வழங்கத் தயார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்திருந்த நிலையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்துள்ளனர்.