இந்த அரசாங்கத்தினால் ஏன் நாட்டில் அவசரகாலச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது?, எந்த காரணத்திற்காக நாட்டில் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது? என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சபையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்று கூடிய பாராளுமன்ற அமர்வின் போது எதிர்க்கட்சி தலைவர் இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார்.
இதன்போது இந்த அரசாங்கத்தினால் சமூக வலைத்தளங்கள் நாட்டில் முடக்கப்பட்டமைக்கான காரணம் என்ன அது தொடர்பில் எங்களுக்கு தெளிவான விளக்கம் தேவைன என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று நாட்டில் நிதி அமைச்சர் இல்லை. புது நிதி அமைச்சர் பதவி ஏற்றார். பின்னர் அவரே விலகிச் சென்றார் இதற்கான காரணம் என்ன? இன்று நாட்டில் நிதி அமைச்சர் யார் என்பதை தெரிந்து கொள்ள விரும்புகின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டில் அவசரகால சட்டம் போடு அளவுக்கு நாட்டில் பயங்கரவாதிகள் ஊடுறுவினார்களா ஏன் இந்த சட்டம் பிறப்பிக்க்படப்ட காரணம் என்ன, எனவே இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் தெளிவான விவாதத்தை முன்வைக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
அதேபோல முகக்கவசங்களை அணிந்து கொண்டு யுனிபோர்ம் ணிந்து இலக்கத்தகடு இல்லாத மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத சில குழுக்கள் பொலிஸ் அதிகாரிகளுடன் வாதிடுகிறார்கள். இவர்கள் யார், ஏதற்காக வந்தார்கள், இரகசிய இராணுவமா?, வேறு அமைப்பை சேர்ந்தவர்களா என்பது தொடர்பில் எங்களுக்கு விளக்க வேண்டும் எனவும் அவர் சபையில் தெரிவித்துள்ளார்.