இலங்கை ஒலிம்பியாட் கணித அறக்கட்டளை மூலமான 2021/21 ற்கான இலங்கை கணிதப் போட்டிகள் நடைபெறவுள்ளன.
அதற்கமைய இந்த கணித போட்டியானது தரம் 3 தொடக்கம் 13 வரையான பிள்ளைகளுக்கான சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய 3 மொழிகளிலும் நடைபெறுவுள்ளன.
அத்தோடு நான்கு மட்டங்களில் அவர்களின் விமர்சன ரீதியான சிந்தனை, ஆக்கத்திறன் மற்றும் கணிதத்திறன் ஆகியவற்றை விருத்தி செய்வதற்காக மேற்கொள்ளப்படுகின்றன.
SLMC 5 ஆனது தரங்கள் 3, 4 மற்றும் 5 ஆகியவற்றுக்காகவும், SLMC 8 ஆனது தரங்கள் 6, 7 மற்றும் 8 ஆகியவற்றுக்காகவும், SLMC 11 ஆனது தரங்கள் 9, 10 மற்றும் 11 ஆகியவற்றுக்காகவும், SLMC 13 ஆனது தரங்கள் 12 மற்றும் 13 ஆகியவற்றுக்காகவும் நடத்தப்படுகின்றது.
சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டிக்கான அணியினரை தெரிவுசெய்வதற்கான முதலாவது போட்டியே இவ் இலங்கை கணித போட்டியாகும்.
ஆகவே இலங்கை கணித போட்டியானது சர்வதேச மட்டத்திற்கு வடிவமைக்கப்பட்டுள்ளதோடு, இது அமெரிக்க கணித போட்டி மற்றும் அவுஸ்திரேலிய கணிதப் போட்டி ஆகியவற்றுக்கு சமமாவதுடன் அமெரிக்க மற்றும் அவுஸ்திரேலிய IMO போட்டிகளுக்கு மாணவர்களை தெரிவு செய்வதற்கும் உகந்ததாகும்.
உங்களது கணிதத் திறன் விமர்சனரீதியாக சிந்திக்கும் திறன் மற்றும் ஆக்கத்திறன் என்பவற்றைச் விருத்தி செய்வதற்காக உங்களால் மேற்கொள்ளப்பட்டுள்ள இத் தெரிவானது மிகவும் பொருத்தமானதாகும். SLMC ற்கு தயார்படுத்துவதற்காக, கணித பாடத்தை பிரபலப்படுத்துவதற்கு ஈடுபாடு கொண்டதும், இலாப நோக்கமற்றதுமான இலங்கை கணித ஒலிம்பியாட் மன்றமானது, அனைத்து மட்டங்களிலும் நிகழ்நிலை கணித பயிற்சி முகாம்களை மேற்கொள்கின்றது.
மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு இங்கே https://bit.ly/3iX4YfX