இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் தமிழகம் வந்துள்ள இலங்கை தமிழர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்கக்கோரி தமிழக அரசு சட்ட நிபுணர்களை அணுகியுள்ளது.
அதற்கமைய இதுவரை 60 இலங்கைத் தமிழர்கள் தனுஷ்கோடி மற்றும் இராமேஸ்வரம் சென்றடைந்துள்ளனர்.
அவர்களில் பெரும்பாலானோர் அதிக பணத்தை செலுத்தி மீன்பிடி படகுகளில் இந்தியக் கரைக்கு வருவதற்காக தங்களுடைய அனைத்து பொருட்களையும் விற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அனைத்து அகதிகளையும் மண்டபம் அகதிகள் முகாமில் தங்கவைத்துள்ளது, ஆனால் இந்தியக் கரையை அடைவோருக்கு முழு அளவிலான அகதி அந்தஸ்தை வழங்க மத்திய அரசிடம் இருந்து மாநிலம் அனுமதி பெற வேண்டும் என்பதால் தங்குமிடம் தற்காலிகமாக்கப்பட்டுள்ளது.
அகதி அந்தஸ்து வழங்குவது தொடர்பாக புதுடெல்லியில் உள்ள சில மூத்த வழக்கறிஞர்களின் சேவையைப் பயன்படுத்தியதாக தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
1 இலட்சத்துக்கும் அதிகமான இலங்கைத் தமிழர்கள் தற்போது இந்தியாவில் உள்ளனர், அவர்களில் பெரும்பான்மையானவர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர் மற்றும் 67 அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள புனர்வாழ்வு மற்றும் அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள அகதிகளுக்கான பண உதவியை ஸ்டாலின் சமீபத்தில் அதிகரித்தார்.
அதன்படி திருத்தப்பட்ட வரவு- செலவு திட்டத்தின் படி, ஒரு குடும்பத்தின் தலைவருக்கு முன்பு இருந்த ரூ.1,000இல் இருந்து இப்போது ரூ.1,500 கிடைக்கவும் நடிவடிக்கை எடுத்துள்ளார்.
தற்போது தமிழக அரசு இலங்கையில் இருந்து வருபவர்களை சட்டவிரோத குடியேற்றவாசிகளாகக் கருதி, அவர்களுக்கு உணவு மற்றும் தங்குமிட வசதிகளை அளித்து, அவர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்க மத்திய அரசின் அனுமதிக்காக தமிழ் நாடு அரசு காத்திருக்கிறது.
இவர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்குவதற்குத் தேவையான சட்ட ஆதரவை தமிழக அரசின் சட்ட வல்லுநர்கள் வழங்கி வருகின்றனர்.