இலங்கை யாத்­தி­ரிகர்­க­ளுக்­காக 1585 ஹஜ் கோட்­டாக்­கள் ஒதுக்கப்பட்டுள்ளன!

Date:

சவூதி அரேபியாவின் ஹஜ் விவகாரங்களுக்கான அமைச்சு இவ்வருடம் இலங்கை ஹஜ் யாத்திரிகர்களுக்காக 1585 ஹஜ் கோட்டாக்களை ஒதுக்கியுள்ளது.

கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் கொவிட் 19 வைரஸ் தொற்றுநோய் பரவல் காரணமாக இலங்கைக்கு ஹஜ் கோட்டா ஒதுக்கப்படவில்லை.

இந்நிலையில், இலங்கைக்கு இவ்வருடம் 1585 ஹஜ் கோட்டா ஒதுக்கப்பட்டுள்ளதாக உத்தியோகப் பற்றற்ற முறையில் அறியக்கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த விடயம் சவூதி அரேபிய ஹஜ் அமைச்சின் உத்தியோகபூர்வ அறிவிப்பு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துக்கு கிடைக்கப்பெற்றதும் அது தொடர்பில் திணைக்களம் பொது மக்களுக்கு அறிவிக்கும் என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் இப்றாஹிம் அன்சார் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் ஏற்கனவே பதிவு செய்து ஹஜ் யாத்திரைக்கு திட்டமிட்டிருப்பவர்கள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ அறிவித்தல் கிடைக்கும் வரை காத்திருக்கும் படியும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இவ்வருடத்துக்கான ஹஜ் முகவர்கள் நியமனம் இதுவரை வழங்கப்படவில்லை எனவும் அதனால் ஹஜ் யாத்திரிகர்கள் எவருக்கும் முற்பணம் செலுத்த வேண்டாமெனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

கடந்த இரு வருடங்களாக உலகளாவிய ரீதியில் கொவிட் 19 வைரஸ் தொற்று நோய் பரவியிருந்த நிலையில் இலங்கையிலிருந்து எவரும் ஹஜ் யாத்திரை மேற் கொள்ள அனுமதிக்கப்படவில்லை.

தற்போது கொவிட் 19 வைரஸ் தொற்று நோய் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் சவூதி அரேபிய ஹஜ் அமைச்சு இவ்வருடம் சவூதி அரேபிய உள்நாட்டவர்கள் உட்பட உலகளாவிய ரீதியில் ஒரு மில்லியன் யாத்திரிகர்களை அனுமதிப்பதற்குத் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வரும் ஹஜ் கோட்டா ஹஜ் முகவர்களுக்கிடையில் பகிர்ந்தளிப்பது தொடர்பில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அரச ஹஜ் குழுவுடன் கலந்தாலோசித்து இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும்.

இதேவேளை ஹஜ் முகவர்களுக்கு செலுத்தப்படவேண்டிய ஹஜ் கட்டணம் மற்றும் சவூதி அரேபியாவில் முகவர்களினால் வழங்கப்படும் தங்குமிடவசதி உட்பட ஏனைய வசதிகள் தொடர்பில் அரச ஹஜ்குழு ஹஜ் யாத்திரிகர்களுக்குத் தெளிவுபடுத்தும் என அரச ஹஜ் குழுவின் தலைவர் அஹ்கம் உவைஸ் தெரிவித்தார்.

அதுவரை எவருக்கும் முற்பணம் செலுத்துவதிலிருந்தும் தவிர்ந்துகொள்ளுமாறும் அவர் வேண்டியுள்ளார்.

இதனிடையே, இவ்வருடம் ஹஜ் யாத் திரை மேற்கொள்ள திட்டமிட்டுள்ள பய ணிகள் இடைத்தரகர்களுக்கும், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத் தினால் இவ்வருடம் அங்கீகரிக்கப்படாத முகவர்களுக்கும் முற்பணம் செலுத்தி ஏமாற வேண்டாம் என ஹஜ் முகவர்கள் சங்கத்தின் தலைவர் எம்.ஜி.எம்.ஹிஸாம் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திணைக்களத்தினால் ஹஜ் தொடர்பான உத்தியோக பூர்வ அறிவிப்புகள் வெளி யானதும் அங்கீகரிக்கப்பட்டுள்ள ஹஜ் முகவர்களையே தங்களது பயணத்துக்கு தொடர்பு கொள்ளும் படியும் அவர் அறிவிப்புச் செய்துள்ளார்.

ஹஜ் கட்டணம் தற்போதைய டொலரின் மதிப்பு மற்றும் நாட்டின் நெருக்கடி நிலைமை, விமான பயணச்சீட்டு கட்டண அதிகரிப்பு என்பனவற்றை அடிப்படையாகக் கொண்டே தீர்மானிக்கப்படும். திணைக்கள அதகாரிகளுடன் இது தொடர்பில் கலந்துரையாடப்படும் எனவும் அவர் கூறினார்.

(மூலம்: விடிவெள்ளி)

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...