ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் காரை பயன்படுத்தும் சரத் வீரசேகர? : சபையில் ஹரின் பெர்னாண்டோ கேள்வி

Date:

ஈஸ்டர் தாக்குதல் பயங்கரவாதத்திற்கு பயன்படுத்தப்பட்ட (Toyota Land Cruiser V8) ரக வாகனத்தை முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர எப்படி பயன்படுத்துகிறார்? என பிரபல ஊடகவியலாளர் ஒருவரை மேற்கோள்காட்டி, ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்று (19) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இந்தக் கேள்வியை முன்வைத்தார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு பிரதான சூத்திரதாரியாக செயல்பட்டவர் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பைச் சேர்ந்த சஹ்ரான் ஹாசிம் பயன்படுத்திய அதே டொயோட்டா லேண்ட் குரூஸர் வி8(Toyota Land Cruiser V8) ரக வாகனத்தைத் தான் தற்போது பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர பயன்படுத்துவதாக பிரபல ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தற்போது சரத் வீரசேகர பாராளுமன்றத்திற்கு வந்துள்ள நிலையில், தாக்குதல்கள் நடந்து 3 வருடங்கள் ஆகிவிட்டன, இந்தக் குற்றச்சாட்டுக்கு தயவு செய்து பதிலளிக்குமாறு அவரிடம் கேட்டுக்கொள்வதாக ஹரீன் சபையில் கேள்வி எழுப்பினார்.

இதன்போது, சரத் வீரசேகர பதிலளிக்கும்போது,

‘ குறித்த வாகனம் அரசால் கைப்பற்றப்பட்டுள்ளது, தற்போது அது அரசுக்கு சொந்தமான வாகனம், இந்த விடயம் தொடர்பாக, நான் உடனடியாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் பேசினேன், அவர் வாகனம் இப்போது அரசுக்குச் சொந்தமானது என்று கூறினார்.

வாகனம் அரசால் கையகப்படுத்தப்பட்டு, பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது, பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் குறித்த வாகனத்தை பயன்படுத்துகின்றார்கள் என சரத் வீரசேகர பதிலளித்தார்.

இதேவேளை குறித்த வாகனம் தம்முடைய தனிப்பட்ட உடைமையில் இல்லை எனவும், அந்த வாகனத்தை தாம் போதும் பயணிக்க பயன்படுத்தியதில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...