எரிவாயு தட்டுப்பாடு இல்லை: சமூக ஊடகங்கள் மூலம் எம்மீது சேறு பூசுவதாக லிட்ரோ நிறுவன தலைவர் குற்றச்சாட்டு!

Date:

சமையல் எரிவாயு விநியோகம் குறைக்கப்படுவதாகக் கூறி லிட்ரோ நிறுவனம் மீது சேறு பூசுவதற்கு மக்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகின்றனர் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இன்று (29) காலை ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

‘மக்கள் சேற்றை வீச சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகின்றனர். அதேசமயம் இந்த பதிவுகள் அனைத்தும் போலியானவை. சமையல் எரிவாயு விநியோகத்தை நாங்கள் குறைக்கவில்லை, ஒரு நாளைக்கு 80,000 சிலிண்டர்களை விநியோகிக்கிறோம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், முக்கியமாக எரிவாயுவை நம்பியிருக்கும் நகரங்கள் மற்றும் தொழில்துறை பகுதிகளுக்கு முன்னுரிமை அளித்துள்ளோம். நாங்கள் அன்றாடம் வெளியிடும் சிலிண்டர்களின் எண்ணிக்கையை குறைக்கவில்லை’ எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த வாரத்திற்குள் மேலும் 2 எரிவாயு ஏற்றுமதி கப்பல்கள் இலங்கைக்கு வர உள்ளதாகவும், அந்த சரக்குகள் வந்தவுடன் நிலைமை சீரடைய வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை ‘முன்பு எரிவாயு பற்றாக்குறை இருந்தது, ஆனால் தற்போது பற்றாக்குறை இல்லை. நிலைமை முற்றாகச் சரியாகி பழைய நிலைக்குத் திரும்ப இன்னும் ஒரு மாதம் ஆகும்’என்று அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...

மத்திய கிழக்கு நாடுகளுடன் வெளிவிவகார அமைச்சர் பேச்சுவார்த்தை: இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், மத்திய கிழக்கு முழுவதும் உள்ள...

ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து 84 சடலங்கள் மீட்பு

இலங்கையை அண்மித்த கடற்பிராந்தியத்தில் விபத்துக்குள்ளான ஈரானியப் போர்க்கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்...