ஐக்கிய மக்கள் சக்தியின் மக்கள் பேரணி 3ஆவது நாளாக தொடர்கிறது!

Date:

அரசாங்கத்துக்கு எதிராகவும் ஜனாதிபதி பதவி விலகுமாறும் வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்டு வரும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் போராட்டம் இன்று (வியாழக்கிழமை) மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது.

கண்டியிலிருந்து கொழும்பிற்கு பேரணியாக செல்ல ஏற்பாடு செய்துள்ள இந்தப் பேரணியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு பேரணியாக செல்கின்றனர்.

‘ஐக்கிய மக்கள் பேரணி’ என்ற தொனிப்பொருளிலில் ஆரம்பமாகிய இந்த பேரணி 5 நாட்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த பேரணி இன்று கலிகமுவவில் இருந்து தங்கோவிட்ட நோக்கி பயணிக்கவுள்ளது. அத்தோடு, இந்தப் பேரணி எதிர்வரும் முதலாம் திகதி கொழும்பை வந்தடையவுள்ளது.

மேலும், கண்டியிலிருந்து நேற்று முன்தினம் (26) ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பேரணியில் அதிகளவானவர்கள் கலந்துகொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை

ஊவா, சப்ரகமுவ மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல்...

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...

புத்தளம் ஆதார வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ்:

தற்போது வடமேல் மாகாண சபையின் கீழ் இயங்கி வரும் புத்தளம் ஆதார...

ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியுடன் ஜனாதிபதி அநுர பேச்சு!

ஐக்கிய அரபு அமீரகம் அண்மையில் எதிர்கொண்ட தாக்குதல்கள் குறித்துத் தனது கவலையைத்...